Skip to main content

மும்பையின் அதிரடி வெற்றி – ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை அணி !

 மும்பையின் அதிரடி வெற்றி – ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை அணி !

https://www.aathiraiinfo.xyz/2025/04/Mumbai-dramatic-victory-Mumbai-team-beat-Hyderabad.html
MI won by 4 wickets

ஐபிஎல் 2025 போட்டியில் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற 33வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி, அவர்களின் மூன்றாவது வெற்றியாகும் மற்றும் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேற்றம் செய்தது.


ஹைதராபாத் இன்னிங்ஸ்:

  • மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
  •  ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் நன்றாக ஆட்டத்தை ஆரம்பித்தனர்.  முதல் ஓவரிலேயே இவர்கள் இருவரின் கேட்ச்களையும் தவறவிட்டனர் மும்பை அணியினர். ஆனாலும் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினர். ஒரு வழியாக அபிஷேக் ஷர்மா ஆட்டத்தின் போக்கை மாற்ற ரன்களை குவிக்கத் தொடங்கினார்.
  • 28 பந்துகளின் 40 ரன்கள் குவித்தவுடன் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவுட் ஆகிவிட்டார்.பின்னர் மும்பையின் ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் நுழைந்ததும், சூழ்நிலை மாறியது. டிராவிஸ் ஹெட்டும், இஷான் கிஷனும் அவரால் அவுட் செய்யப்பட்டனர்.

பெரும் ஏமாற்றத்தில் ஹைதராபாத் அணி ரசிகர்கள் 

  • ஹைதராபாத் அணியானது  தற்போது அதிக சிக்சர்களை வீசி எதிரணிகளை கதற விட்டிருந்தனர். அதேபோல் இந்த மேட்சும் அதிக சிக்ஸர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே ஏனென்றால் இந்த மேட்சில் 17வது போரில் தான் முதல் சிக்சர் இருந்தது.

கிளாசன் 37 ரன்கள் 

  • அனைத்து பேட்ஸ்மன்களும் தடுமாறி ஆடிக் கொண்டிருந்தனர். 100 முதல் 120 ரன்களுக்குள்ளே ஹைதராபாத் அணி சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணியில் க்ளாசன் 28 பந்துகளில் 37 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஒரு வழியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 162/5 என்ற ஓரளவான ஸ்கோர் மட்டும் சேர்த்தது.

மும்பையின் பேட்டிங்:

  • 163 ரன்களை வெல்ல வேண்டிய நிலைமையில், மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களது பதிலடி இன்னிங்ஸை திடமாக தொடங்கியது.
  • மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் ஆகிய இருவரும் நன்றாக இன்னிங்சை தொடங்கினர்.
  • ரோஹித் சர்மா 26 ரன்களுடன் வெளியேறினார்.
  • பின்பு ரிக்கல்டன் பேட் கம்மின்ஸிடம் கேட்ச் அவுட் ஆனார். ஆனால் இந்த இடத்தில் மிகப் பெரிய சுவாரசியம் இருந்தது.ரிக்கல்டன் அவுட் என அம்பையர் தீர்ப்பு இருந்தது வெளியேறிய தருணத்தில் கிளாசன் கிளவுஸ் ஆனது ஸ்டெம்புக்கு முன்னாள் வந்ததை கவனித்த அம்பையர் நோபால் எனத் தீர்ப்பளித்தனர் இதனால் மீண்டும் ரிக்கல்டன் களத்திற்கு வந்தார். ரிக்கல்டன் 31 ரன்களை அடித்த பின்பு அவரும் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு வில் ஜாக்ஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆட்டத்தை எடுத்துச் சென்றனர்.
  •  பின்பு அவர்களும் அவுட் ஆகிவிட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் ஆட்டத்தை எடுத்துச் சென்றனர்.போட்டியின் முடிவில், பாண்ட்யா மற்றும் நமன் தீர் ஒரே ஸ்கோரில் அவுட் ஆனதும் சற்றே பதட்டம் ஏற்பட்டது. ஆனால், திலக் வர்மா ஒரு பவுண்டரியுடன் போட்டியை முடித்தார்.

போட்டிக்குப் பின் பார்வை:

  • மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றியால் நல்ல உற்சாகத்தை பெற்றுள்ளது. வரும் போட்டிகளில் சிறந்து முன்னேறுவதற்கான இது ஒரு திருப்புமுனையாக இருக்கலாம். அடுத்ததாக மும்பை அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளனர் – இது ஒரு பெரும் எதிர்பார்ப்புள்ள போட்டியாகும்.
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த மேட்ச் ஆனது அதிக அனுபவத்தை கொடுத்திருக்கும். அந்த அணி பிளேயர்கள் மீதமுள்ள போட்டிகளை வெல்ல இந்த அனுபவம் தேவைப்படும்.பிழைகளை சீர்செய்து, மீதமுள்ள போட்டிகளில் அவர்கள் திரும்பப் போராட வேண்டும்.:


இந்த மும்பை vs ஹைதராபாத் போட்டி, ரசிகர்களுக்கு முழு பொழுதுபோக்கு வழங்கியது. திடீர் திருப்பங்களும், விக்கெட்டுகளும், சிக்கல்கள் மற்றும் அதிரடியான முடிவும் – அனைத்தும் ஒரே போட்டியில் காணப்பட்டது. மும்பை வெற்றி பெற்றாலும், இந்த போட்டி இரு அணிகளுக்கும் பல பாடங்களை தந்தது என்பது உறுதி!

Comments