இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் நாம் அனைவரும் மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினி போன்ற உபகரணங்களில் உள்ள திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அதனால் நம் கண்களின் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க அனைத்து உபகரணங்களிலும் டார்க் மோட் மற்றும் லைட் மோட் என்ற சிறப்பம்சத்தை அதிகப்படுத்திய வருகின்றனர். இதனை சிலர் உபயோகப்படுத்துகின்றனர், பலர் அதனை அறியாமலே உள்ளனர். மேலும் இதனைப் பற்றி அறிந்து கொள்வோம்!!!
டார்க் மோட் மற்றும் லைட் மோட் பற்றிய விரிவான விளக்கத்தையும், அதன் நன்மை மற்றும் குறைபாடுகளை பற்றிய விரிவான விளக்கத்தை பார்ப்போம்
முதலில் Dark Mode என்பது குறித்து பார்ப்போம்.
டார்க் மோட் என்றால் என்ன?
- டார்க் மோட் என்பது கருப்பு அல்லது அதிக கருப்பு தொடர்புடைய வேறு ஏதேனும் நிறத்தில் பின்னணியை வைத்துக்கொண்டு வெளிர் எழுத்துகளை காண்பிக்கும் ஒரு திரை அமைப்பு. இது சமீபத்தில் பெரும்பாலான செயலிகளில் இடம் பெற்றிருக்கும் ஒரு முக்கியமான அம்சமாகும். Google, Facebook, YouTube, WhatsApp, Instagram, மற்றும் Android/iOS போன்ற அனைத்து முக்கியமான செயலிகளும் இந்த வகையான அமைப்பை கொண்டிருக்கும்.
டார்க் மோட்டின் நன்மைகள்:
1. கண்களுக்கு சோர்வு குறைதல்:
- இரவில் அதிக நேரம் திரையைப் பார்க்கும் போது, அதனுடைய வெள்ளை ஒளி கண்களை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. டார்க் மோட் அமைப்பை பயன்படுத்தும் போது குறைவான ஒளியைக் வெளிப்படுத்துகிறது, இதனால் கண்களுக்கு சுமை குறையும்.
2. OLED திரைகளில் பேட்டரி சேமிப்பு:
- சில ஸ்மார்ட்போன்களில் இருக்கும் OLED திரைகள் கறுப்பு பிக்சல்களை ஒளியில்லாமல் காட்டும் மற்றும் இதனால், டார்க் மோட் பயன்படுத்தும்போது பேட்டரி நீடிக்கும்.
3. நீண்ட நேரம் வேலை செய்வோருக்கான பயன்:
- டெவலப்பர்கள் , கிரியேட்டர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றோர் இரவில் அதிக நேரம் வேலை செய்யும் போது கண்களில் உள்ள அழுத்தம் குறைகிறது. அதனால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.
4. மிகவும் மனநிறைவை தரும் தோற்றம்:
- சில பயனர்களுக்கு இந்த டார்க் மோட்டின் அழகு மற்றும் எளிமை தோற்றத்தால் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். பகல் மற்றும் இரவு போன்ற இரு நேரங்களிலும் இதனை default ஆக பயன்படுத்துகின்றனர்.
டார்க் மோட்டின் குறைபாடுகள்:
- வெயிலில் வெளியே பயன்படுத்தும்போது, தொடர்ந்து திரையை காண்பதற்கு சிரமம் ஏற்படலாம்.
- சில UI மற்றும் தளங்கள் மற்றும் செயலிகள் போன்றவற்றில் டார்க் மோட்டை ஆதரிக்காது.
- அதிக நேரம் பயன்படுத்தினால், கண்களுக்கு ஆழமான எழுத்துக்கள் வாசிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
லைட் மோட் என்றால் என்ன?
- Light Mode என்பது பின்புலத்தில் வெள்ளை அல்லது வெளிர் நிறங்களைப் பயன்படுத்தி, எழுத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை கருப்பு அல்லது வேறு நிறத்தில் காட்டும் முறை. இது பல ஆண்டுகளாக டிஃபால்ட் முறைமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
லைட் மோட்டின் நன்மைகள்:
1. ஒளி நிறைந்த சூழலில் வாசிப்பதற்கு உகந்தது:
- வெள்ளை பின்னணி மற்றும் கருப்பு எழுத்துகள் அதிக ஒளியில் தெளிவாகக் காணப்படும் என்பதனால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும்.
2. பயனர் அனுபவம் பரந்த அளவில் பரிசோதிக்கப்பட்டது:
- இணையதளங்கள், செயலிகள் மற்றும் UI வடிவமைப்புகள் பெரும்பாலும் லைட் மோட்டை வைத்துத்தான் வடிவமைக்கப்படுகின்றன.
3. அனைத்து தகவல்களையும் தெளிவாக காட்டும்:
- கருப்புப் பின்னணியில் காட்டும் சில ஒளி நிற எழுத்துக்கள் காண்பிக்க வாய்ப்பு இல்லாமலும் போகலாம். ஆனால் லைட் மோட்டில் அதிக தெளிவாக உள்ளடக்கம் தெரியும்.
லைட் மோட்டின் குறைபாடுகள்:
- இரவு நேரத்தில் பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்களில் வலி ஏற்படலாம் மற்றும் கண்களில் வேறு ஏதேனும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
மருத்துவ ரீதியான பார்வை:
- ஆய்வுகள் என்ன சொல்கின்றன?பல மருத்துவர்கள் மற்றும் கண் நிபுணர்கள் கூறுவதாவது:
- ஒளி சூழலுக்கு ஏற்ப திரை பிரகாசம் மற்றும் Mode-ஐ மாற்றுவது முக்கியம்.
- இரவில் கண்களுக்குத் தணிக்கையாக டார்க் மோட் உதவலாம்.
- ஆனால், நீண்ட நேரம் டார்க் மோட்டில் வாசிப்பது கூட கண்களை சோர்வடையச் செய்யலாம்.
பயனாளர்களுக்கான பரிந்துரைகள்:
1. தானாக மாறும் முறை (Auto Mode):
- Android/iOS-இல் "Auto Theme" மூலம் காலை நேரத்தில் லைட் மோட், இரவு நேரத்தில் டார்க் மோட் என்ற முறையை செயல்படுத்தலாம்.
2. Screen Brightness ஐ கட்டுப்படுத்துங்கள்:
- வெயிலில் நாம் வெளியே செல்லும் போது அதிக பிரகாசம் தேவை, இருளில் குறைந்த பிரகாசம் போதுமானது. அதனால் ஆட்டோ பிரைட்னஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இதனால் இதில் உள்ள சென்சார் மூலம் மொபைல் ஆனது அதிக ஒளி இருக்கும் இடத்தில் அதிக வெளிச்சத்தையும், குறைந்த ஒளி இருக்கும் இடத்தில் குறைந்த வெளிச்சத்தையும் தானாகவே மாற்றிக் கொள்ளும்.
3. ப்ளூ லைட் ஃபில்டர் பயன்படுத்தவும்:
- இரவில் கண்களுக்குச் சோர்வு ஏற்படாமல் இருக்க இந்த ப்ளூ லைட் ஃபில்டரை பயன்படுத்துங்கள்.