தலைப்புகள்:
- பிளாக்கர் என்றால் என்ன?
- பிளாக்கரின் முக்கிய அம்சங்கள்
- பிளாக்கர் தொடங்குவதற்கான முறை
- Google search engine இல் இணைப்பது
பிளாக்கர் என்றால் என்ன?
- பிளாக்கர் (Blogger) என்பது Google நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு இலவசமான வலைப்பதிவியல் (blogging) சேவையாகும்.
- இதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.
- யார் வேண்டுமானாலும் தங்களுக்கான தனிப்பட்ட வலைப்பதிவை (blog) உருவாக்கி, அதில் கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களை பதிவிட முடியும்.
பிளாக்கரின் முக்கிய அம்சங்கள்:
- இதனை முழுவதுமாக இலவசமாக பயன்படுத்தலாம் – உங்கள் வலைப்பதிவுக்கு .blogspot.com என்ற இலவச டொமைன் கிடைக்கும்.
- Google கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் ,உங்கள் Gmail கணக்கை பயன்படுத்தியே எளிதாக பிளாக்கரில் உள்நுழையலாம்.
- தனிப்பயனாக்க முடியும் – டெம்ப்ளேட்டுகள் (templates) மற்றும் விட்ஜெட்கள் (widgets) மூலம் உங்களது வலைப்பதிவின் வடிவமைப்பை மாற்றலாம்.
- Adsense மூலம் வருமானம் ஈட்டலாம், உங்கள் பதிவுகளில் விளம்பரங்களை காண்பித்து பணம் சம்பாதிக்க இது முக்கியமானதாகும்.
- SEO வசதி – தேடல் இயந்திரங்களில் பதிவுகள் தெளிவாக காணும் வகையில் அமைக்கலாம்.
எளிமையான முறையில் சொன்னால்: பிளாக்கர் என்பது நீங்கள் உங்கள் அறிவையும் அனுபவங்களையும் இணையத்தில் பகிரக்கூடிய ஒரு எழுத்து மேடை.
நீங்கள் Blogger-ஐத் தொடங்க விரும்புகிறீர்களா? வாங்க மேற்கொண்டு பார்ப்போம்.
பிளாக்கர் தொடங்குவதற்கான முறை
- முதலில் கூகுளில் www.blogger.com என்ற வெப்சைட்டுக்கு செல்லவும்.
- பின்பு உங்கள் Google (Gmail) கணக்கை பயன்படுத்தி login செய்யவும்.
- பின்பு “Create New Blog” என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு பெயர் (Title) மற்றும் ஒரு தொலைநகர இணைய முகவரி (URL) தேர்ந்தெடுக்கவும் (எ.கா. yourname.blogspot.com).
- ஒரு டெம்ப்ளேட் (Template) தேர்ந்தெடுக்கவும் . வேறு வேண்டுமானாலும் பின்னால் மாற்றலாம். Template என்பது உங்கள் வலைப்பதிவின் வடிவமைப்பு ஆகும்.
- புது பதிவு (New Post) எழுதுவதற்காக “New Post” என்பதைக் கிளிக் செய்து உங்கள் முதல் கட்டுரையை எழுத தயாராகுங்கள்.
- உங்கள் கட்டுரையை எழுதி முடித்த பின்பு அந்த இடுகையை வெளியிட (Publish) செய்ய “Publish” பட்டனை அழுத்தினால் உங்கள் பதிவு இணையத்தில் அனைவரும் காணக்கூடியதாக ஆகும்.
- Layout மற்றும் Theme பகுதிகளில் சென்று உங்கள் வலைப்பதிவை மேலும் வடிவமைக்க அல்லது வேறு ஏதேனும் வடிவமைப்பை மாற்றலாம்.
வலைப்பதிவை Google search engine இல் இணைப்பது
- இந்த முறையை பயன்படுத்தி கூகுள் சர்ச் இன்ஜினில் உங்களது வலைப்பதிவை கூகுளில் யாரேனும் தேடும் பொழுது உங்களது வலைப்பதிவானது show ஆகும்படி செய்யலாம். மேலும் google சர்ச் இன்ஜினை பற்றிய தகவல்களுக்கு தனியாக ஆர்டிகள் ஒன்றினை பதிவேற்றம் செய்வோம். அதன் வழியே google சர்ச் இன் பற்றி பல தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
Tags
Blogger